சுமார் 150 வகையான மருந்துகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு

267

அரச வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் சுமார் 150 வகையான மருந்துகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சுகாதார அமைச்சினால் தேவையான பல மருந்துப் பொருட்களை கையிருப்பில் வைத்திருக்க முடியவில்லை என இந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவதற்கும், நோயாளர் பராமரிப்பு சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்கும் இயலவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க வைத்தியசாலைகளில் அத்தியவசிய சத்திரசிகிச்சைகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு சுகாதார அமைச்சினால் அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் வைத்தியர் சமில் விஜேசிங்க கருத்து வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here