இலங்கையின் மின் உற்பத்தி, இந்தியாவை விட இரு மடங்கு அதிகம்?

1073

இந்திய மின்சக்தி அமைச்சின் அறிக்கையின்படி, இலங்கையில் மின்சார அலகு ஒன்றின் உற்பத்தி செலவு, ஒரு அலகுக்காக இந்தியா செலவிடும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என சுட்டிக்காட்டியுள்ளதாக “தேசய” எனும் உள்நாட்டு செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்தியா 25 இலங்கை ரூபாய்களை மட்டுமே செலவிடுகிறது என்று அந்த செய்தித்தாள் மேலும் கூறுகிறது.

எனினும் இலங்கை தற்போது ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 52 இலங்கை ரூபாவை செலவிடுகிறது.

இந்த செலவின இடைவெளிக்கு முக்கிய காரணம் இலங்கையின் மின் உற்பத்திக்கான நிலக்கரியை பெருமளவில் நம்பியிருப்பதுதான் என்று கூறப்படுகிறது.

இலங்கையில் காற்றாலை மின்சாரம் மற்றும் சூரிய சக்தியும் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டாலும், சதவீதம் குறைவாகவே உள்ளது.

சூரிய சக்தி, அணுசக்தி, காற்றாலை மற்றும் நிலக்கரி போன்ற பல ஆற்றல் உற்பத்தி ஆதாரங்களின் விகிதாசார பயன்பாடு காரணமாக இந்தியா தனது ஆற்றல் உற்பத்தி செலவை பெருமளவில் குறைத்துள்ளதாக செய்தி அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here