சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி

372

பெப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000ஐத் தாண்டியுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தற்காலிக தரவுகளின்படி, பெப்ரவரி 1 மற்றும் 14 க்கு இடையில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 54,685 ஆகும்.

முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இது சுமார் 15 சதவீத வளர்ச்சியாகும். 2022 பெப்ரவரி 1 முதல் 14 வரை 47,282 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ஜனவரி 1 முதல் பெப்ரவரி 14 வரையிலான மொத்த வருகைகள் 157,230 ஆகும், இது ஆண்டுக்கு ஆண்டு (YoY) 21 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில், அந்தக் காலத்திற்கான ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 129,609 ஆக இருந்தது.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையின் வாராந்திர ஆய்வும் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. பெப்ரவரி முதல் வாரத்தில் (1 – 7) 26,506 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இரண்டாவது வாரத்தில், எண்ணிக்கை 28,179 ஆக உயர்ந்துள்ளது.

பெப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மொத்த வருகையில் 26 வீதத்தைக் கொண்டு, இலங்கைக்கான மிகப் பெரிய சுற்றுலாப் போக்குவரத்து உருவாக்கியாக ரஷ்ய கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here