ஹம்பாந்தோட்டை மேயர் பொதுஜன பெரமுனவில் இருந்து இடைநீக்கம்

282

ஹம்பாந்தோட்டை மேயர் காமினி ஸ்ரீ ஆனந்தாவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துமாறும், ஹம்பாந்தோட்டை மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் அவரை நீக்குமாறும், மேயர் பதவியிலிருந்தும் நீக்குமாறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஹம்பாந்தோட்டை உதவி தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளது.

மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள ஹம்பாந்தோட்டை நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக் குழுவொன்றில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்திருந்தமையினால் அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகத்திடமிருந்து தாம் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்படுவதாக கடிதம் கிடைத்துள்ளதாகவும், ஆனால் தாம் பதவி நீக்கம் செய்யப்பட்டமை உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்படும் வரை அந்த பதவியில் நீடிப்பதாக தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளதாக டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு அவர் தெரிவித்திருந்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தன்னிடம் விளக்கம் கேட்டதாகவும் ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மேயர் பதவியில் இருந்து இராஜினாமா செய்த எராஜ் ரவீந்திர பெர்னாண்டோவுக்குப் பின் அவர் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here