சரணவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

243

தேசிய லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றும் போது, ​​தேசிய லொத்தர் சபையின் மூன்று வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமைக்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததன் பின்னர் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, சரண குணவர்தனவை 30,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த உத்தரவிட்டார்.

அதன் பின்னர், வழக்கு விசாரணைக்காக மார்ச் 23ஆம் திகதிக்கு அழைக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் 2007 ஜூலை 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தேசிய லொத்தர் சபையின் மூன்று வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 3,510,000 ரூபா நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here