ஹவாய் தீவில் சீனாவின் மர்ம பலூன் பறந்ததால் பரபரப்பு

265

அமெரிக்கா வான்வெளி பகுதியில் சமீபத்தில் பறந்த சீனா உளவு பலூன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவின் பேரில் அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அமெரிக்க மற்றும் கனடா வான்வெளியில் பறந்த 3 மர்ம பொருளையும் அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஹவாய் தீவில் உள்ள ஹனலோவ் என்ற இடத்தில் 500 மைலுக்கு அப்பால் ராட்சத வடிவிலான வெள்ளை நிற பலூன் மர்மமான முறையில் பறப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுமார் 40 ஆயிரம் அடி முதல் 50 ஆயிரம் அடி உயரத்தில் இந்த மர்ம பலூன் பறப்பதாக அங்குள்ள செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பான அந்த பலூனின் புகைப்படமும் வெளியாகி உள்ளது. அந்த பலூன் எங்கிருந்து வந்தது என்ற விவரம் எதுவும் இல்லை. இதையடுத்து அங்கு உஷார் படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here