follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுபாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு

பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு

Published on

இன்று (20) நள்ளிரவுக்குப் பிறகு, எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கிடைக்கப்பெறவுள்ளது. அரசியலமைப்பின் 70 (1) உட்பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், அரசியலமைப்பின் 70 (1) (அ) உறுப்புரையின் பிரகாரம், தற்போதைய பாராளுமன்றம் முதல் முறையாக கூடுவதற்கு நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில், பாராளுமன்றத் தீர்மானம் மூலம் கோராதபட்சத்தில் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது.

நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2020 மார்ச் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். எனினும், கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, 2020 ஆகஸ்ட் 5 குறித்த தேர்தல் நடைபெற்றது.

இதன்படி, ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியான கோட்டாபாய ராஜபக்ஷவின் தலைமையில், ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு அந்த வருடம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி கூட்டப்பட்டது.

குறித்த முதல் அமர்வு இடம்பெற்று இன்று (20) நள்ளிரவுடன் இரண்டு வருடங்களும் ஆறு மாதங்கள் நிறைவடைகிறது.

எனவே, கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலின் பின்னர் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு, அரசியலமைப்பின் 70 1 (அ) உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் ஜீவன் விடுத்துள்ள கோரிக்கை

சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை...

மூத்த பிரஜைகளின் கணக்கு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

மூத்த பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என...

எதிர்வரும் 02 மாதங்களில் மின் கட்டணத்தை குறைக்க முடியும்

எதிர்வரும் இரண்டு மாதங்களில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேச செயலகத்தில்...