இலங்கைக்கு நிவாரணம் வழங்குவதில் சவூதி உள்ளிட்ட நாடுகள் கவனம்

412

உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் உச்சி மாநாடு இன்று (22) ஆரம்பமாகிறது.

தற்போது ஜி 20 குழுவின் தலைவராக இந்தியா உள்ளது, அதன் உச்சி மாநாடு பெங்களூரில் 25 ஆம் திகதி நடைபெற உள்ளது.

கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து இந்த மாநாட்டில் பரிசீலிக்கப்படும்.

சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளபடி, இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் தடையாக உள்ள விடயங்கள் இந்த சந்திப்பில் பரிசீலிக்கப்படவுள்ளதுடன், சீனா உள்ளிட்ட நாட்டின் கடன் வழங்கும் நாடுகளும் இந்த சந்திப்பில் இணையவுள்ளன.

மாநாட்டுடன், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, இந்தியா, சீனா, சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா தலைமையிலான ஜி7 நாடுகளின் ஆன்லைன் சந்திப்பும் நடைபெறவுள்ளது.

கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகளில் கடன் மறுசீரமைப்புக்கான பொதுவான தரநிலைகள் குறித்த உடன்பாட்டை எட்டுவதற்கு இது திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here