“பென்டகன் பிரதிநிதிகள் அரச புலனாய்வு சேவை அதிகாரிகளை நிராயுதபாணியாக்கினர்”

284

அண்மையில் இரண்டு விசேட விமானங்களில் இலங்கை வந்த பென்டகன் பாதுகாப்பு அதிகாரிகள் குழு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பல கேள்விகளை இன்று(21) பாராளுமன்றில் எழுப்பினார்.

இவர்கள் ஏன் இலங்கைக்கு வந்தனர் என பிரதானமாக கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச,இந்தக் குழு இலங்கைக்கு வந்தது தொடர்பில் அரசாங்கம் பொறுப்பான அறிக்கையொன்றை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறு தெரிவித்தார்.

இந்தக் குழுவினர் அரச புலனாய்வு சேவை அலுவலகத்திற்குச் சென்றதாகவும், அங்கு அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நிராயுதபாணிகளாக்கப்பட்டதாகவும், அமெரிக்கப் பிரதிநிதிகள் ஆயுதம் ஏந்தியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

இந்தக் குழுவின் வருகை குறித்து வெளிவிவகார அமைச்சர் அறிந்தாரா என வினவியபோது, ​​அது தொடர்பில் தனக்குத் தெரியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here