கொரியா உலக சமாதான மாநாட்டின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உலக சமாதான மாநாட்டில் விசேட உரையொன்றை ஆற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொரியா சென்றுள்ளார்.
சமாதான மாநாட்டின் பணிப்பாளர் நாயகம் யான் யங் ஹோ விடுத்த அழைப்பின் பிரகாரம் மைத்திரிபால சிறிசேன இந்த உரையை ஆற்ற உள்ளார்.
உலக அமைதி மாநாடு நாளை (24) கொரியாவின் தலைநகர் சியோலில் நடைபெற உள்ளது, அங்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலக அமைதி குறித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.