ஜப்பானுடன் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற மறுநாளில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு அதிக வரி விதித்து வருகிறார். அதேநேரத்தில் அவர் வர்த்த ஒப்பந்தம் மேற்கொள்ள பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
தற்போது, ஜப்பானுடன் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என டிரம்ப் அறிவித்து உள்ளார். இது குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஜப்பானுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.