2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (23) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை இடம்பெற்றதுடன், விவாதத்தின் முடிவில் இது வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2025.06.05ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.