அரச ஊழியர்களில் 3,100 பேரினது கதி?

1705

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்த அரச மற்றும் அரை அரச ஊழியர்கள் தொடர்பில் இன்று (24) பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

அங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சம்பளம் இன்றி சுமார் 3,100 அரச ஊழியர்கள் பங்குபற்றுகின்றனர்.

தேர்தலை நடத்துவது தொடர்பில் இதுவரையில் சரியான தீர்மானம் எடுக்கப்படாத நிலையில் குழுவின் சார்பில் எடுக்கப்படும் தீர்மானம் குறித்து பிரதமரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியிருந்தார்.

“இந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கு சுமார் 3,100 அரச ஊழியர்கள் முன்வந்துள்ளனர். சம்பளம் இன்றி விடுமுறையில் உள்ளனர். தேர்தலை நடாத்த முடியாது என ஜனாதிபதி நேற்று தெரிவித்தார். அவ்வாறு இருக்க இந்த 3,100 ஊழியர்களுக்கும் என்ன தீர்மானத்தினை எடுத்துள்ளீர்கள் என இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நான் பிரதமரிடம் கேட்கிறேன்..”

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

“.. இந்தத் தேர்தலுக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்டோர், சுமார் 7,100 அரசு மற்றும் அரை அரசு ஊழியர்கள் தங்கள் பெயர்களைத் வழங்கியுள்ளனர். இந்தத் தேர்தல் குறித்து முடிவெடுக்காமல் இந்த அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் கொடுங்கள். இல்லையெனில் அந்த மக்களுக்கு வேறு வருமானம் இல்லை..”

அங்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், அமைச்சரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் அவர்கள் மீண்டும் பணிக்கு சமூகமளிக்க முடியும் எனதெரிவித்தார்.

“கடந்த காலங்களில் இது போன்ற பிரச்சினைகள் இருந்தன. அத்தகைய சமயங்களில் அமைச்சரவையில் முடிவெடுத்து பணிக்கு வருமாறு கூறியுள்ளனர். பிரதமரிடம் பேசி இவர்களை பணிக்கு அனுப்புவது குறித்து அமைச்சரவை முடிவெடுக்கலாம்..”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here