பாலியல் வழக்கில் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு மேலும் 16 ஆண்டு சிறை

381

ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் (வயது 68) தன்னிடம் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக ‘MeToo’வில் முறைப்பாடு இடப்பட்டது.

ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, ராஸ் மெக்கோவன், அன்னபெல்லா, ஜேன் டோ உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் முறைப்பாடு இட்டனர். இந்த முறைப்பாடுகள் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

2006-ல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக திரைப்பட தயாரிப்பு பெண் நிர்வாகி மிமி ஹலேயியும், 2013-ல் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக நடிகை ஒருவரும் தொடர்ந்த வழக்குகளில் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சூழலில் 2013-ம் ஆண்டு ஹார்வி வெய்ன்ஸ்டீன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக இத்தாலி நாட்டை சேர்ந்த நடிகை தொடர்ந்த வழக்கை லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நீதிமன்றம் விசாரித்து வந்தது. இதில் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றத்துக்காக ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here