இலங்கைக்கு அணுசக்தி கொண்டு வர ஒப்புதல்

750

எதிர்கால எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய அணுசக்தியை மாற்றாக கருத வேண்டும் என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அந்த தீர்மானத்தின் பிரகாரம், அணுசக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக வழிநடத்தல் குழுவும் 9 செயற்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அந்த குழுக்கள் தயாரித்த சுயமதிப்பீட்டு அறிக்கை தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனம் வழங்கிய பரிந்துரைகளின் பிரகாரம் அணுசக்தி உற்பத்தித் திட்டத்தை முன்னெடுக்கும் திறன் இலங்கைக்கு இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி, அணுசக்தி சேதங்களுக்கான சிவில் பொறுப்புகள் தொடர்பான வியன்னா உடன்படிக்கை மற்றும் அணுசக்தி சேதங்களுக்கான கூடுதல் இழப்பீடு உடன்படிக்கையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் பொருத்தமானது என்று அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆகியோர் முன்வைத்த கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here