2022 சிறந்த கால்பந்து வீரருக்கான விருது மெஸ்சி’க்கு

260

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ஏற்பாடு செய்த “தி பெஸ்ட்” கால்பந்து விருது வழங்கும் விழாவில் அர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி 2022 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்றுள்ளார்.

அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, பிரான்சின் கரீம் பென்சிமா மற்றும் கைலியன் எம்பாப்பே ஆகியோர் 2022 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

இதில், இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை 2022 கால்பந்து உலகக் கிண்ணத்தினை வென்ற அர்ஜென்டினா அணியின் கெப்டன் லியோனல் மெஸ்சி வென்றார்.

இந்த விருதை மெஸ்சி வெல்வது இது 2வது முறையாகும்.

அதன்படி, உலகின் பல்வேறு கால்பந்து விருது வழங்கும் விழாக்களில் 10 முறை சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்ற உலகின் ஒரே வீரர் என்ற பெருமையை லியோனல் மெஸ்சி பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here