நாட்டில் இடம்பெறும் லொத்தர் மோசடி தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை

438

இலங்கையில் இடம்பெற்று வரும் லொத்தர் மோசடி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒரு பொது அறிவிப்பில், மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப், குறுந்தகவல் அல்லது உள்ளூர் அழைப்புகள் மூலம் லாட்டரி வென்றதாகத் தெரிவித்து, பின்னர் ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யச் சொல்வதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.

இதுபோன்ற செய்திகளைப் பெற்றவர்கள், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவிலோ 011 247 7125 / 011 247 509 என்ற எண்களில் ஊடாக முறைப்பாடு அளிக்குமாறு இலங்கை மத்திய வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

அத்தகைய செய்திகளைப் பெற்றவர்கள் அந்த விவரங்களையும் ஸ்கிரீன் ஷாட்களையும் வாட்ஸ்அப் மூலம் 076 520 0290 என்ற இலங்கை மத்திய வங்கியின் நிதிப் பிரிவுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here