உக்ரைனில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்

365

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி 24ம் திகதி போரை தொடங்கியது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதலை தொடுத்தது. ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து கொண்டிருக்கிறது. இதில் கிழக்கு உக்ரைனில் சில பகுதிகளை ரஷ்யா தன் வசப்படுத்தி உள்ளது.

உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் அந்நாட்டு இராணுவம், ரஷ்ய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது. இது ரஷியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைனில் மிகப்பெரிய தற்கொலை தாக்குதல்களை நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே போர் ஒரு ஆண்டை கடந்ததையடுத்து உக்ரைனில் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது தற்கொலை தாக்குதல் குறித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தி மிரர் ஊடகம் வெளியிட்ட செய்தியில், ரஷ்யா ஜனாதிபதி புதின், உக்ரைனில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த உத்தரவை பிறப்பிக்க திட்டமிட்டுள்ளார்.

ரஷ்யா இராணுவத்தால் இந்த தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு அடுத்த மூன்று மாதங்களுக்கு அமுலில் இருக்கும். உக்ரைனில் ரஷ்யா இராணுவத்தால் வலுவாக இலக்கை அடைய முடியவில்லை. இதுரை ஒருங்கிணைந்த ஆயுத தாக்குதலை திறம்பட செய்ய முடியவில்லை. இதனால் தற்கொலை தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here