வங்கி கடனை செலுத்தக்கூடியவர்களுக்கு நிவாரணம்

874

அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வரிகள் காரணமாக கடன் பெற்று தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இரண்டு சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (03) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடனை மறுசீரமைத்து கடனை செலுத்தக்கூடியவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அதிக வட்டி மற்றும் வரி விதிப்பால் கடன் வாங்கியவர்கள் கடனை செலுத்த முடியாமல் சிரமப்படுவதாக முறைப்பாடுகள் வருகிறது. அவர்களுக்காக ஏற்கனவே இரண்டு புதிய சுற்றறிக்கை கடிதங்களை வழங்கியுள்ளோம். அதை கருத்தில் கொண்டு கடன் உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நிவாரணம் வழங்கவும், வங்கிகளில் கடன்களை செலுத்தும் திறன் தொடர்பில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் அறிவிக்கபப்ட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here