தேர்தல் திகதி அறிவிப்பு ஒத்திவைப்பு [UPDATE]

237

தேர்தல் திகதி அறிவிப்பு அடுத்த வாரம் முதல் சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (03) கூடியிருந்தது.

ஆனால், நிதியமைச்சர் மற்றும் அதன் செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக, திகதி நிர்ணயம் செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் செயலாளர், ஊடக செயலாளர் மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி அடுத்த வாரம் முதல் சில நாட்களில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் அதன் பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்படும் எனவும் நிமல் ஜீ. புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டம் மூலம் 2023 தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுத்து, நிதி அமைச்சர் மற்றும் அதன் செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here