follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1பராமரிப்பின்றி 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள்

பராமரிப்பின்றி 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள்

Published on

பழுதுபார்ப்பு மற்றும் சேவைகளுக்கு பணம் இல்லாததால், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பத்து லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் நாடு முழுவதும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன பழுதுபார்ப்பு துறை தொடர்பான வட்டாரங்கள் தெரிவித்தன.

இவற்றில் ஏறக்குறைய பாதி வாகனங்கள் முறையான சேவை விநியோகம் இல்லாத காரணத்தால் முற்றிலும் செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாகன உதிரிபாகங்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதால், பல வாகனங்களில் உதிரி பாகங்களின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளதாகவும், இதனால் வாகனங்களின் உயிர்வாழ்வு வெகுவாக குறைந்துள்ளதாகவும் வாகன சேவை வழங்குநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல வாகனங்களின் சேவை வழங்கல் நேரம் தாண்டிய போதிலும் வாகனங்களை சேவைக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலைமையை கருத்திற்கொண்டு வாகனங்களுக்கான சேவைகளை இலகுபடுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும், இதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவை பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டுவதற்கான வழி என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கிடையில், கொரோனா காரணமாக நாடு மூடப்பட்டிருந்த காலகட்டத்தில், சரியான சேவை மற்றும் பராமரிப்பு இல்லாததால் ஏராளமான வாகனங்கள் ஓட்டுவதற்கு தகுதியற்றதாக மாறியதாக புதிய வாகனங்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நாட்டில் இயங்கும் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை நெருங்குகிறது. அவற்றில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...