தனியார் வைத்தியசாலை ஊழல் : விசாரணைகள் மந்தநிலையில்

785

நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இருந்து பெண் நோயாளி ஒருவருக்கு அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபைக்கு முறைப்பாடு ஒன்று கடந்த 23ம் திகதி கிடைத்துள்ளது.

இந்த வைத்தியசாலையில் 12, 264 ரூபாவிற்கு விற்கப்படும் LYORTAM எனும் மருந்தினை 33,400 ரூபாவிற்கும், 6,796 ரூபாவிற்கு விற்கப்படும் மருந்தொன்று 17,030 ரூபாவிற்கும் குறித்த வைத்தியசாலையில் நோயுற்றிருந்த பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாரடைப்பால் சிகிச்சை பெற்று வந்த இந்தப் பெண்ணுக்கே இந்த மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் குறித்த பெண்ணின் மகன் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபையில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் உண்மைகளை ஆராய்ந்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபையின் செயலாளர் வைத்தியர் தம்மிக்க அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் இது வரைக்கும் குறித்த வைத்தியசாலையில் மருந்துகள் அதிக விலைக்கே விற்கப்படுவதாக எமக்கு கிடைக்கும் வைத்தியசாலை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here