follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுசுமார் 32 அரசு நிறுவனங்கள் ஊழல் நிறைந்தவை

சுமார் 32 அரசு நிறுவனங்கள் ஊழல் நிறைந்தவை

Published on

சுமார் 420 அரச நிறுவனங்களில் 32 அரச நிறுவனங்கள் அதிக ஊழல் மற்றும் பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தியவை என கோப் குழு அடையாளம் கண்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார்.

இந்நிறுவனங்கள் மூன்று வருடங்களில் 46,500 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முப்பத்திரண்டு நிறுவனங்களும் 2018ஆம் ஆண்டில் 19,300 கோடி ரூபாயும், 2019ஆம் ஆண்டில் 15,800 கோடி ரூபாயும், 2020ஆம் ஆண்டில் 11,400 கோடி ரூபாயும் நட்டமடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததுடன், பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் கோடிக்கணக்கான வரிப் பணத்தை அரசாங்கம் இறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை மின்சார சபை, பெற்றோலிய சட்டமூலக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா சதொச நிறுவனம் என்பன நட்டத்தைச் செலுத்தும் நிறுவனங்களாக உள்ளதாகவும், மொத்த நட்டத்தில் நாற்பது வீதமானது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கே சொந்தம் எனவும் காமினி வலேபொட தெரிவித்தார்.

ஊழியர்களைக் கவனிப்பதற்காகவே இன்று சில நிறுவனங்கள் இயங்குவது வேதனையான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வினைத்திறனற்ற அரச நிறுவனங்களை வினைத்திறனுள்ள நிலைக்கு கொண்டு வருவதற்கான பொறிமுறையொன்று உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், எனவே முறையான கணக்காய்வு மற்றும் அரசாங்க நடவடிக்கைகளில் தலையீடு தேவை எனவும் சுட்டிக்காட்டினார்.

சில நிறுவனங்கள் பயனற்ற திட்டங்களைக் கொண்டுவந்து பணத்தை அபகரிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இந்த நிறுவனங்களை காப்பாற்றுவதற்கு தனியார் மயமாக்கல் அல்ல தீர்வு எனவும் காமினி வலேபொட மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....