பாண் விலை குறையும் சாத்தியம்

590

வெதுப்பக உணவு பொருட்களான பாண் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைக்கப்படுமே தவிர, அதிகரிக்க தயார் இல்லை எனவும், குறைந்தபட்சம் பாணின் விலையை 100 ரூபா வரை குறைக்க எதிர்பார்ப்பதாகவும் அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கு அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைத்தால் மட்டுமே தற்போது முடங்கியுள்ள வெதுப்பக தொழிலை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

தற்போது ஒரு இறாத்தல் பாண் 150, 160, 170 ரூபா என்ற விலைகளிலும், இன்னும் சில பகுதிகளில் 180 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்த அவர், அந்த விலைகளை நுகர்வோரால் தாங்க முடியாதுள்ளதால் வெதுப்பக உற்பத்திகளின் விற்பனை, 20 முதல் 25 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மின் கட்டண உயர்வால், 7000 வெதுப்பகங்களில் சுமார் 5000க்கும் அதிகமானவை மூடப்பட்டுள்ளதாக ஜயவர்தன கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here