follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுஅமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட 6 வாகனங்கள் ஏலத்தில்

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட 6 வாகனங்கள் ஏலத்தில்

Published on

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 6 வாகனங்களை சீர் செய்ய நிதிப் பற்றாக்குறை காரணமாக அவற்றை ஏலம் விடுவதற்கு கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

Land Cruiser V8, Land Rover, Micro, Tata வாகனங்கள் 2020 முதல் அமைச்சக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கைத்தொழில் அமைச்சின் பிரதம கைத்தொழில் சேவை அதிகாரி கிஹான் சுமனசேகரவிடம் கேட்ட போது, ​​இந்த வாகனங்கள் 2013 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகவும், இந்த வாகனங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப குறைபாடுகளை சீர்செய்வதற்கு அதிக பணம் செலவிடுவதாகவும் தெரிவித்தார்.

அந்த வாகனங்களை கைத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் திருத்தினால் ஏனைய வாகனங்கள் திருத்துவதற்கு பணமில்லாமல் போகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் காரணமாக டெண்டர் நடைமுறையை பின்பற்றி அந்த வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...