தேர்தலுக்கு பணம் வழங்காவிடின் மீண்டும் நீதிமன்றம் செல்வோம்

169

தேர்தலுக்கு பணம் வழங்காவிடின் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் அதிகாரத்தை ஜனாதிபதி அபகரித்ததன் காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றம் சென்றதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து ஜனநாயகத்தை அழித்து, இராணுவம் மற்றும் பொலிஸ் பலத்தால் நாட்டை ஆளுகின்ற ஒரு யுகத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி வந்துள்ளதாகவும், இன்று மக்களின் ஜனநாயகத்திற்கும், ஜனரஞ்சகத்திற்கும் பெரும் சவாலாக இருப்பதாகவும் ரஞ்சித் மத்துமபண்டார மேலும் தெரிவித்தார்.

சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே திரு.ரஞ்சித் மத்துமபண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here