“இந்தத் தேர்தல் பிள்ளையார் திருமணம் மாதிரி”

1422

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய சமூக வலைத்தளங்களில் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அவர், ‘அந்தத் தேர்தல் பிள்ளையார் திருமணம் போன்றது’ என குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான நேற்றைய போட்டியின் போது திமுத் கருணாரத்ன மற்றும் குசல் மெண்டிஸ் இடையேயான வெற்றிகரமான ஆட்டம் குறித்து, மஹிந்த தேஷப்பிரிய தனது முகநூலில் வாழ்த்து தெரிவித்து பதிவொன்றினை வெளியிட்டிருந்தார்.

இந்தப் பதிவிற்கு கருத்துக்களைச் சேர்த்தவர்களில் ஒருவர், ‘அதிகாலை எழுந்தவுடன் கிரிக்கெட் பற்றிப் பதிவிட வேண்டும், அப்போதுதான் தேர்தலை மக்கள் மறந்து விடுவார்கள்’ எனப் பதிவிட்டிருந்தார், அதற்குப் பதிலளித்து மஹிந்த தேஷப்பிரிய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இந்த தேர்தல் பிள்ளையார் திருமணம் போல, நாளைக்கு உன் திருமணம்னு சிவன் சொன்னாராம். பொன் தாளில் எழுதிக் கொடுத்தாராம். தினமும் காலையில எழுந்து பார்க்கிறவர், “ஆ நாளைக்கு கல்யாணம்” என்று சொல்லிவிட்டு, தன் காரியத்தில் இறங்குகிறாராம். .” என்று பதிவிட்டுள்ளார்.

No description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here