மருந்து தட்டுப்பாட்டிற்கு இம்மாதத்திற்குள் தீர்வு

231

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு பெரும்பாலும் இம்மாதத்திற்குள் நிவர்த்தி செய்யப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அத்துடன் சத்திர சிகிச்சை உட்பட முன்னுரிமையளிக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளிலும் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று(10) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் 156 மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவியது. அதில் 83 மருந்துகள் நேற்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியுடனான இத்தகைய சூழ்நிலையிலும் சுகாதாரத்துறைக்கு உச்ச அளவு ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை நிதியமைச்சு மேற்கொண்டுள்ளது.

சுகாதாரத் துறையில் காணப்படும் பொது பிரச்சினையானது அவ்வாறு கேள்வி கோரலின் போது மூன்று அல்லது நான்கு மாதங்கள் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக செலவாகிறது. அதனால் நினைத்த உடன் உடனடியாக அவ்வாறு மருந்துகளை பெற்றுக் கொள்வது என்பதும் சுலபமானதல்ல.

அதன்படி மருந்துப் பொருட்கள் தொடர்பான இந்த பிரச்சினையை முதற்காலாண்டிற்குள் தீர்த்து வைப்பேன் என தெரிவித்திருந்தேன். அந்த வகையில் இந்த இரண்டு மூன்று வாரங்களில் பெருமளவு மருந்துகள் எமக்கு கிடைக்கப்பெற்று வருகின்றன என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here