மார்ச் 15 பாடசாலை நடவடிக்கைகளும் நிறுத்தப்படுமா?

512

எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி நிரந்தரமாக ஆசிரியர் – அதிபர் வேலைநிறுத்தம் நடத்தப்படும் என ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வரும் 15ம் திகதி அனைத்து அரசு, அரை அரசு, தனியார் மற்றும் தோட்டத் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, “அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு எதிராக உழைக்கும் மக்கள் போராட்டம்” என்ற ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த உள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அனைத்து ஆசிரியர்கள், அதிபர்கள், தனியார் ஆசிரியர்கள், துணைப் பாடசாலை ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர் இந்தப் பணிப்புறக்கணிப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் பிரதேச கல்வி அலுவலகங்கள் மட்டத்தில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு மேலும் தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here