follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுமீண்டும் கோட்டை - மாலபே இலகு ரயில் திட்டம்

மீண்டும் கோட்டை – மாலபே இலகு ரயில் திட்டம்

Published on

கொழும்பு கோட்டை – மாலபே இலகு ரயில் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

அதற்கான மாற்று முன்மொழிவுகளை பெறுவதற்காக மாநகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இந்த இலகு ரயில் திட்டத்தை அமைக்க முன்மொழியப்பட்டது.

கொழும்பு – மாலபே உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் பணிபுரிவதால், இந்த ரயில் சேவையின் மூலம் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நிலம் கையகப்படுத்திய பிறகு, இந்த திட்டம் 2020 இல் தொடங்கி 2024 நடுப்பகுதியில் முடிக்கப்பட வேண்டும்.

இந்த ரயில்வே திட்டத்திற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) வழங்குகிறது. அதற்காக ஜப்பான் அரசாங்கம் 1,850 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தது.

ஆனால் கடந்த காலத்தில் நாடு எதிர்கொண்ட பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் காரணமாக இந்த இலகு ரயில் திட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பானுக்கான கடந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் விளைவாக இரத்துச் செய்யப்பட்ட இலகு ரயில் திட்டத்தை மீள ஆரம்பிக்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

16 கிலோமீற்றர் நீளம் மற்றும் 16 நிலையங்களுடன் நிர்மாணிக்கப்படவிருந்த இந்த புகையிரத சேவையின் ஊடாக மாலபேயில் இருந்து கொழும்பு கோட்டைக்கு 30 நிமிடங்களில் பயணிக்க முடியும்.

இந்த ரயில் போக்குவரத்து நெரிசல் நேரங்களில் 4 நிமிடங்களுக்கும், நெரிசல் இல்லாத நேரங்களில் 10 நிமிடங்களுக்கும் ஒருமுறை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...

கெரண்டிஎல்ல பஸ் விபத்து குறித்த ஆராய விசேட பொலிஸ் குழு

ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட...

நாட்டில் உப்பு தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதி தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக்...