பல பொலிஸ் பிரிவுகளில் இருந்தும் கலவர எதிர்ப்பு உபகரணங்கள் கொழும்புக்கு

827

பொலிஸ் மா அதிபரின் அங்கீகாரத்துடன் மேல் மாகாணத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் கலவர எதிர்ப்பு உபகரணங்களை வழங்குமாறு 12 பொலிஸ் பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கண்ணீர்ப்புகை முகமூடிகள், கலகக் கவசங்கள், பாதுகாப்பு தலைக்கவசங்கள் மற்றும் இறப்பர் பொடிகளை வழங்குமாறு எழுத்துமூல அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம், மட்டக்களப்பு, எல்பிட்டிய, குருநாகல், மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இருந்து இந்த உபகரணங்கள் கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தவிர தங்காலை, கண்டி, கந்தளை, நுவரெலியா, புத்தளம் மற்றும் திருகோணமலை பொலிஸ் பிரிவுகளில் இருந்தும் கலவர எதிர்ப்பு உபகரணங்கள் கோரப்பட்டுள்ளன.

உரிய வாகனத்தில் மத்திய ஆயுதக் களஞ்சியசாலைக்கு உபகரணங்களை கொண்டு வருமாறு பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு அந்த பிரிவுகளின் மூத்த டி.ஐ.ஜிக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here