follow the truth

follow the truth

July, 27, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஅமைச்சர்களை நியமிக்கும் படலம் சில காலத்திற்கு ஒத்திவைப்பு

அமைச்சர்களை நியமிக்கும் படலம் சில காலத்திற்கு ஒத்திவைப்பு

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கிடைத்தவுடன் புதிய அமைச்சரவை (அமைச்சர்கள்) நியமனம் செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பணப்பிரச்சினை காரணமாக தற்போது புதிய அமைச்சர்களை நியமிப்பது பொருத்தமானதல்ல என பொருளாதார நிபுணர்கள் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்க அரசாங்கம் முதலில் தீர்மானித்திருந்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ள பத்து உறுப்பினர்களின் பட்டியலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கட்சி அண்மையில் கையளித்துள்ளது.

ஆனால் அந்தப் பட்டியலில் இருந்து முன்னாள் அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி மட்டுமே நியமிக்கப்பட்டார்.

புதிய அமைச்சர்கள் பட்டியலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை

பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய...

சஜித் ஜனாதிபதியானால் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார்

சஜித் பிரேமதாச இந்த நாட்டு ஜனாதிபதியானால் தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின்...

தேஷபந்து இல்லாவிட்டாலும் ‘யுக்திய’ தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளை எதிர்த்துப் போராடத் தொடங்கப்பட்ட 'யுக்திய' நடவடிக்கை என்ன தடைகள் வந்தாலும் நிறுத்தப்படாது என்று...