follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுடெலிகாம் - லங்கா வைத்தியசாலையை விற்பனை செய்ய அமைச்சரவை ஒப்புதல்

டெலிகாம் – லங்கா வைத்தியசாலையை விற்பனை செய்ய அமைச்சரவை ஒப்புதல்

Published on

கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சி மற்றும் லங்கா ஹொஸ்பிட்டல் பிஎல்சி ஆகிய இரண்டு நிறுவனங்களும் அரசாங்கத்தின் கொள்கை முடிவிற்கு இணங்க அரசாங்கத்தின் பங்கு உரிமையை விற்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளன.

இந்த இரண்டு நிறுவனங்களில் பெரும்பாலானவை அரசுக்கு சொந்தமானவை.

இது தொடர்பில் கொழும்பு பங்குச் சந்தைக்கு அறிவித்துள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சி, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு பிரிவினால் அறிமுகப்படுத்தப்பட்ட பங்குகளின் விற்பனை எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் என தெரிவித்துள்ளது.

இதேவேளை, லங்கா ஹொஸ்பிட்டல் பிஎல்சியும் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சியின் வெளியிடப்பட்ட பங்கு மூலதனத்தில் 49.50% திறைசேரியிடம் உள்ளது.

இதேவேளை, Lanka Hospital PLC இன் பங்கு மூலதனத்தில் 51.34% இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளது. இதுSri Lanka Insurance Corporation Ltd – Life Fund – 26.27% ක් සහ Sri Lanka Insurance Corporation Ltd – General Fund – 25.07% ஆகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில்...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினராக...

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை...