2025ல் இரண்டு புதிய வரிகள்

1373

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி மூலம் வீழ்ச்சியடைந்த நாட்டை வழமைக்கு கொண்டு வர முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரச வருமானம் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.3 ஆக இருப்பதாகவும் உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் அரச வருமானம் மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (22) விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டுக்குள் அரசாங்க வருவாயை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாக அதிகரிப்பதே எங்களின் எதிர்பார்ப்பு. துறைவாரியாக வரி விலக்கு இல்லாமல் வருமான வரி விகிதம் இப்போது 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வாட் வரி 8 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. VAT வரி விலக்குகளை படிப்படியாக குறைக்கவும், VAT ரீபண்ட்களை விரைவுபடுத்தவும், S VAT முறையை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2025 ஆம் ஆண்டில், குறைந்தபட்ச வரி விலக்குக்கு உட்பட்டு, சொத்து பரிமாற்றத்திற்கு பதிலாக செல்வ வரியை அறிமுகப்படுத்தவும், பரிசு மற்றும் எஸ்டேட் வரியை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here