ஞானக்காவின் மகள் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள்.. 80 இலட்சம் மதிப்புள்ள தங்கங்கள் கொள்ளை

949

அநுராதபுரம் புதுநகரில் பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றை நடத்தும் ஞானக்கா என அழைக்கப்படும் ஞானவதி ஜயசூரியவின் மகளின் வீட்டில் 80 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் மற்றும் தங்கப் பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 20ம் திகதி ஞானா அக்காவின் மகளின் கணவர் அனுராதபுரம் தலைமையகப் பொலிஸில் இந்தத் திருட்டு குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.

வடமத்திய மாகாணத்தில் திட்ட முகாமையாளரான இவர், வீட்டில் உள்ள அறையொன்றின் அலுமாரியில் இருந்த 650,000 ரூபா பெறுமதியான தங்கப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

திருடப்பட்ட பணம் மற்றும் தங்கப் பொருட்களின் மொத்தப் பெறுமதி சுமார் 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா என அவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுமாரியில் மூன்று பெட்டிகளில் தங்கப் பொருட்கள் இருந்தன, அதில் சுமார் 05 இலட்சம் ரூபா பெறுமதியான 02 ஜோடி வைரம் பதித்த காதணிகள், சுமார் 06 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு வைரம் பதித்த மோதிரங்கள், சுமார் 09 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு வைரம் பதித்த வளையல்கள், 48 இலட்சம் ரூபா பெறுமதியுடைய சுற்றிலும் மதிப்புள்ள வைரங்கள் பதிக்கப்பட்ட 03 தங்கத் தகடுகள் உட்பட பல நெக்லஸ்கள், வளையல்கள், பதக்கங்கள் மற்றும் மோதிரங்கள் என பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் (20) வரை இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டாளர் பொலிஸில் தெரிவித்துள்ளார். 23ஆம் திகதி நடைபெறவுள்ள நண்பரின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கொழும்பு செல்வதாகக் கூறும் அவர், நேற்று முன்தினம் (20) மாலை அலுமாரியில் இருந்த தங்கப் பொருட்களை மனைவி சோதனையிட்ட போது பணத்துடன் தங்கப் பொருட்களும் காணாமல் போயுள்ளதை கண்டுள்ளார்.

அநுராதபுரத்தில் கடந்த 02ஆம் திகதி இடம்பெற்ற திருமண வைபவமொன்றில் தனது மனைவி இந்த தங்கப் பொருட்களில் சிலவற்றை அணிந்துகொண்டு கலந்துகொண்டதாகவும், அன்றைய தினம் அந்த தங்கப் பொருட்கள் அலுமாரியில் இருந்ததாகவும் முறைப்பாட்டாளர் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
அதன்படி கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதிக்கும் 20ஆம் திகதிக்கும் இடையில் இந்த திருட்டு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தங்கப் பொருட்கள் மற்றும் பணம் காணாமல் போனமைக்கான சந்தேக நபர் சுமார் 06 வருடங்களாக குறித்த வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவரே என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த அவரது கணவரும், அவரது உறவினரும் முறைப்பாட்டிற்கு சொந்தமான கீரிக்குளமே காணியில் விவசாயம் செய்வதற்காக அழைத்து வரப்பட்டு கடந்த 7ஆம் திகதி வீட்டின் பணிப்பெண்ணுடன் சென்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் இதுவரை வரவில்லை எனவும், பலாங்கொடை வீட்டிற்கும் செல்லவில்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதன்படி பணிப்பெண் தங்கம் மற்றும் பணத்தை திருடிவிட்டு கணவர் மற்றும் உறவினருடன் ஓடிவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here