follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுமக்களின் வாழ்க்கையை மரண விழிம்புக்குக் கொண்டு செல்ல செயற்படவில்லை

மக்களின் வாழ்க்கையை மரண விழிம்புக்குக் கொண்டு செல்ல செயற்படவில்லை

Published on

இந்நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்களின் வாழ்க்கையோடு தாம் விளையாடவில்லை எனவும், அவர்களின் வாழ்க்கையை மரண விழிம்புக்குக் கொண்டு செல்ல செயற்படவில்லை எனவும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நமது நாட்டுக்கு உதவ வேண்டும் என்று தாம் எப்போதும் கூறி வந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வரலாற்றில் சிலர் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எவ்வாறு துரோகம் இழைத்தார்கள் என்பதை இந்நாட்டு மக்கள் அறிவார்கள் என்பதை நினைவூட்டிய எதிர்க்கட்சித் தலைவர், அத்தகைய சம்பிரதாய எதிர்க்கட்சியின் வகிபாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி நிலைப்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் எவ்வாறான நிபந்தனைகளை முன்வைத்துள்ளது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை தனக்கும் நாட்டு மக்களுக்கும் உள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து ரணில் விக்கிரமசிங்க பசில் ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பிய விதம் குறித்தும் அவர் நினைவு கூர்ந்தார்.

நிதிக் குழுவிற்கு ஹர்ஷ டி சில்வாவை நியமிக்குமளவிற்கு உண்மையான தேவைப்பாடு கூட இல்லாத அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவை எவ்வாறு கோருவது எவ்வாறு என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், அன்று சர்வதேச நாணய நிதியம் என்று சொல்லக்கூட அஞ்சிய மொட்டுத் தரப்பினர் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் அடிமைகளாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியா பயணமானார் ஜனாதிபதி

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில்...

யாழில் நாய் இறைச்சி : கடைக்கு சீல்

யாழ்ப்பாணத்தில் உள்ள தெல்லிப்பளை எனும் குறிப்பிட்ட உணவகம் மாட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியை வழங்கியமையால் தரமற்ற உணவு என்ற...

அடுத்து சில தினங்களுக்கு மழையுடனான வானிலை

இலங்கையையும் இலங்கையைச் சூழவுள்ள ஏனைய கடற் பிராந்தியங்களில் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான நிலைமை காரணமாக இன்று (18) முதல்...