ஹஜ் செல்வோருக்கான அறிவித்தல்

1230

மக்காவிற்கு ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக வழங்கப்படும் விசாக்கள் கடந்த வருடங்களைப் போன்று விற்பனை செய்ய இடமளிக்கப்பட மாட்டாது என புத்தசாசன மற்றும் மத கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு முரணாக யாரேனும் செயற்படுவார்களாயின் உடனடியாக அமைச்சுக்கு அறிவிக்குமாறும் புத்தசாசன மற்றும் மத கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கா யாத்திரைக்காக செல்லும் முஸ்லிம்களுக்கு நியாயமான சேவைகளை வழங்க உரிய ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களத்தின் முதன்முறையாக ஹஜ் விடயங்களை கவணிப்பதற்காக தனியானதொரு ஹஜ் விவகார அலுவலகமொன்று பௌத்த விவகார மதவிவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கைக்கு கிடைக்கும் விசாக்களை பல இலட்சங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டன அவ்வாறான குளருபடிகளை தடுப்பதற்காகவே இந் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இம்முறை இலங்கை முஸ்லிம்களுக்காக 3500 விசாக்கள் கிடைக்கும் என நம்புகின்றேன் என அமைச்சர் தெரிவித்தார்,

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here