இந்திய முட்டைகளின் மாதிரிகள் பரிசோதனை

174

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் மாதிரிகள், ஆய்வுக்கூட பரிசோதனைக்காக பெறப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

பறவைக் காய்ச்சல் வைரஸ் உள்ளிட்ட சில வைரஸ் தொடர்பில் இதன்போது ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும் நான்கு நாட்களுக்குள் இந்த ஆய்வறிக்கை சமர்பிக்கப்படவுள்ளதாகவும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல குறிப்பிட்டார்.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள முட்டைகளை பேக்கரிகளில் மாத்திரமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், கால்நடை வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல கூறினார்.

அத்துடன் முட்டைகளின் கழிவுகளை அகற்றுவதற்குரிய வழிகாட்டல்கள் பேக்கரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள முட்டைகள் தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஹேமாலி கொத்தலாவல மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here