மதுபானம் மற்றும் புகையிலை மீதான வரிகளை அதிகரிக்க தீர்மானம்

695

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் படி, ஜூன் மாதத்தில் மதுபானம் மற்றும் புகையிலை மீதான வரிகளை அதிகரிக்க இலங்கை திட்டமிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாக வரி வருவாயை உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளது.

மேலும் நாடு முழுவதும் சொத்து வரியை அறிமுகப்படுத்தவும், நிதி பரிமாற்றங்களை மதிப்பாய்வு செய்யவும், ஜனவரி 1, 2025 முதல் வரி இல்லாத கொடுப்பனவு மற்றும் குறைந்தபட்ச விலக்குகளுடன் பரிசு மற்றும் பரம்பரை வரியை அமுல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. .

இலங்கையின் பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அமைச்சர்கள் இந்த வரி உயர்வுகளால் பாதிக்கப்படுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here