ஹேமா பிரேமதாச தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை திரும்ப அரசிடம் கையளிக்க தீர்மானம்

580

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தாயார் ஹேமா பிரேமதாச அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்கத் தயார் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Talk with Sudaththa யூடியூப் சேனலுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“..என் அம்மா இப்போது உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்துவதில்லை. நான் சொல்லியல்ல அவராகவே அந்த இல்லத்தை ஒப்படைக்கப் போகிறார்.. அவர் ஒரு நாளும் அந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் வாழ்ந்ததில்லை.

எனது அம்மா இப்போது ஒரு தனியார் வீட்டில் வசிக்கிறார். என் தாய் என் தந்தையின் ஓய்வூதியத்தைப் பெறுகிறார், நான் அதை நியாயப்படுத்துகிறேன் என்று சொல்ல விரும்புகிறேன். எனக்கு அதில் தவறேதும் தெரியவில்லை.

என் தாய்க்கு பாதுகாப்பு கிடைக்கிறது. என் அம்மா இப்போது வயதானவர். அந்தச் சலுகைகளை அவர் தவறாகப் பயன்படுத்தி அரசியல் வேலை செய்வதாக நான் நினைக்கவில்லை. அப்பாவின் அர்ப்பணிப்பு என் அம்மாவுக்கு சலுகைகளை அனுபவிப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை. அவரது சொந்த கருத்துப்படி, உத்தியோகபூர்வ இல்லம் ஒப்படைக்கப்பட உள்ளது..”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here