பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குபவர்களாக இளைஞர்கள் உருவாக வேண்டும்

232

நாட்டின் கல்வி குறித்து கல்வியின் புதிய போக்குகள் குறித்து பேசும் போது அது சிலருக்கு வேடிக்கையாக இருந்தாலும், தான் கூறுவது உண்மைதான் எனவும், கொரோனா வந்தபோது பாணிக்குப் பதிலாக தடுப்பூசிகளைக் கொண்டு வரச் சொன்னாலும் அதை அலட்சியப்படுத்திவிட்டு பாணியை பின்தொடர்ந்ததால் அதிகப் பணம் ஒதுக்கி தடுப்பூசியைக் கொண்டு வர நேரிட்டதாகவும், மருந்து கொண்டு வரச் சொன்னபோதும் எல்லாவற்றையுமே கேலிக்கூத்தாகவே எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும், இதனால் நாடு வங்குரோத்தானதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வங்குரோத்தடைந்து விட்டோம் வங்குரோத்தடைந்து விட்டோம் என கூறிக் கொண்டிருப்பதால் வங்குரோத்து நிலையிலிருந்து வெளியேற முடியாது எனவும், ஓர் நாடாக வலுவாக இதற்கு முகம் கொடுக்க தயாராக வேண்டும் எனவும், தனிநபர்களாக நாம் கூடிய அக்கறையுடன் இருக்க வேண்டும் எனவும், நமது உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும் எனவும், அதே நேரத்தில் டிஜிடல் ரீதியான கல்வி முறைக்குள் பிரவேசிக்க வேண்டும் எனவும், இதன் மூலம் உலகில் முதல் நிலை நாடாக எமது நாட்டை ஸ்தானப்படுத்த முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (27) ஹம்பாந்தோட்டை நெதிகம்வில கனிஷ்ட வித்தியாலயத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு, திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல(பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் பாடசாலை வகுப்பறைகளுக்கான டிஜிடல் திறை மற்றும் கணினி உபகரனங்களை அன்பளிப்புச் செய்யும் பிரிவின் 23 ஆவது கட்டமாக 924,000.00 ரூபா பெறுமதியான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களும் இவ்வாறு ஹ/நெதிகம்வில கனிஷ்ட வித்தியாலய அதிபர் திரு.பி.என்.எம். குமாரசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இதற்கு முன்னர் இருபத்தி இரண்டு கட்டங்களில் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக 17,881,650.00 ரூபா பெறுமதியான டிஜிடல் திறைகள் மற்றும் கணினி தொழில்நுட்ப உபகரனங்களை அன்பளிப்பு செய்துள்ளார்.

மேலும் பிரபஞ்சம் வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக எழுபது பாடசாலைகளுக்கு 339,200,000.00 ரூபா பெறுமதியான 70 பாடசாலை பஸ் வண்டிகளும் இவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

பாடசாலைகளில் Knowledge Hub க்களை உருவாக்குவதன் மூலம் நமது நாட்டின் பிள்ளைகளை புதிய உலகிற்கு பிரவேசிக்கச் செய்வதே டிஜிடல் வகுப்பறைகளுக்கான உபகரணங்களை வழங்குவதன் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல, அரச பாடசாலைகளில் பின்பற்றப்படும் பாடத் திட்டத்தைப் பார்க்கும் போது,நம் நாட்டில் காலாவதியான பாடத்திட்டமும், மனப்பாடம் செய்யும் பாடத்திட்டமும் இருப்பதே தெரிகிறது எனவும், உலகில் நடைமுறைச் சவால்களைச் பிரயோக ரீதியாக எதிர்கொள்ளும் திறமையையே வழங்க வேண்டும் எனவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குபவர்களாக இளைஞர்கள் உருவாக வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இணையதளங்கள் மூலம் சில வேறு நோக்கங்களுக்கான சக்திகள் இயங்கினாலும்,பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பிள்ளைகளுக்கு அதைக் பயன்படுத்தும் திறனை வழங்க வேண்டும் எனவும், கணினி அறிவை வழங்கும் ஆசிரியர்கள் சிறந்த கற்றலாற்றலை பெறும் வகையில் ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும், இதன் மூலம், பாடசாலை மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப வலுவூட்டுல் செயற்பாடு இடம் பெறும் என்பதை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

டிஜிடல் இளைஞர்களாக, டிஜிடல் குடிமக்களாக, டிஜிடல் நாடாகவும் உருவாக்கி உலகை வெல்லும் குடிமக்களை உருவாக்கும் முயற்சியே இந்த பிரபஞ்ச திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் டிஜிட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பக் கல்வியை மேலும் வலுப்படுத்துவதே நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here