follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுநிர்மாணத்துறையினை மேம்படுத்த நடவடிக்கை

நிர்மாணத்துறையினை மேம்படுத்த நடவடிக்கை

Published on

நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்துவதுடன், நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வுகள் வழங்கப்படும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

நிர்மாணத்துறையை மேம்படுத்துவதற்கான வட்டி விகிதங்கள் மற்றும் வங்கி மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழு நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை அடுத்து கட்டுமானத்துறை எதிர்நோக்கும் நிதிச் சிக்கல்கள் மற்றும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சாகல ரத்நாயக்க, நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என தெரிவித்தார்.

நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் நிதித்துறையின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளித்தனர்.

பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் ஏனைய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

LATEST NEWS

MORE ARTICLES

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய பிரதான வீதியை இன்று (17) இரவு 8 மணி முதல்...

உயர் நீதிமன்றினால் கோட்டாவுக்கு நோட்டீஸ்

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கியமை தொடர்பில்...

தன்சல்களில் உணவு பழுதடைந்திருந்தால் PHIக்கு அறிவிக்கவும்

வெசாக் தினங்களில் வழங்கப்படும் தன்சல் உணவுப் பொருட்கள் பழுதடைந்து உண்பதற்கு தகுதியற்றதாக இருந்தால் உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரி...