‘ஹரக் கட்டா’விடமிருந்து உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு

292

தடுத்து வைக்கப்பட்டுள்ள நந்துன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டா, தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த அடிப்படை உரிமை மனுவில், மடகஸ்கரில் கைது செய்யப்பட்ட அவர் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது உயிருக்கு பாரிய ஆபத்து இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரியுள்ளார்.

அவர்களை நீதிமன்ற முன் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here