பொரலஸ்கமுவ, பெல்லன்வில ரஜமகா விகாரையின் மதிலுக்கு அருகில் இருந்து இன்று (13) கைக் குண்டொன்று மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
விகாரை வளாகத்தில் துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்த போது இந்த கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும், இது துருப்பிடித்த நிலையில் இருந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் டெய்லி சிலோனுக்குத் தெரிவித்தார்.
விகாரையின் பணியாளர் இருவர் வழங்கிய தகவலுக்கமைய பொலிசார் குறித்த விகாரைக்குச் சென்று கைக்குண்டை மீட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கைக்குண்டை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்வதற்காக பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனையடுத்து விகாரைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இந்தக் கைக்குண்டு கைவிடப்பட்ட நிலையில் இங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.