SJB பாராளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் ஜனாதிபதியுடன் – UNP : மறுக்கும் நளின்

1219

ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன குறிப்பிடுகின்றார்.

இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இதற்கான உடன்படிக்கையை ஜனாதிபதிக்கு வழிவகைகள் ஊடாக வழங்கியுள்ளதாகவும் முன்னாள் உறுப்பினர் தெரிவித்தார்.

இவர்களில் சிலர் தாம் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்வதாக தனிப்பட்ட முறையில் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மிகக் குறுகிய காலத்தில் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.

அவ்வாறு இருக்க, இந்தக் கருத்துக்களை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுப் பிரதானி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மறுத்துள்ளார்.

அண்மைய நாட்களாக ஐக்கிய மக்கள் சக்தியின் பல்வேறு எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் ஆளும் தரப்புக்குப் போவதாக பல்வேறு செய்திகள் பரவி வருவதாகவும், இது எதிர்க்கட்சியைப் பலவீனப்படுத்தும் முயற்சி என்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியொன்றுக்கே நாங்கள் கிட்டிய காலத்தில் செல்வோம் எனவும், சரியான பொருளாதார நோக்குடன் தூய்மையான ஆட்சியை விரும்பும் அனைவரும் இதற்காக ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுப் பிரதானி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here