தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் முக்கிய கலந்துரையாடல் இன்று

275

தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் முக்கிய கலந்துரையாடல் இன்று (03) பிற்பகல் நடைபெறவுள்ளது.

இதற்காக பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள், சமூக, சிவில் அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள் என தொழிற்சங்கங்கள் ஒன்றிணையவுள்ளதாக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தெரிவித்துள்ளன.

புதிய வரித் திருத்தங்கள் மற்றும் பயங்கரவாதச் சட்டம் உள்ளிட்ட பல விடயங்களின் அடிப்படையில் அமுல்படுத்தப்படவுள்ள எதிர்கால தொழில்சார் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

தொழில் வல்லுநர்கள் இதுவரை ஜனாதிபதியுடன் கலந்துரையாடாத பின்னணியிலேயே அது அமைந்துள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக ஆசிரியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதால் பிரச்சினைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதிய பல்கலைக்கழக பேராசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது திறைசேரியின் அனுமதியுடன் மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here