நாட்டில் பாவனையிலுள்ள இந்திய மயக்க மருந்துகள் உடனடியாக மீளப்பெறப்பட்டன

436

தற்போது வைத்தியசாலைகளில் அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகள் உடன் அமுலாகும் வகையில் பாவனையில் இருந்து மீள பெறப்பட்டுள்ளன.

அதன் தரம் தொடர்பில் கிடைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மயக்க ஊசிகள் தொடர்பில், நிபுணர்களின் ஒத்துழைப்புடன் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹிலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.

மூன்று பிரிவுகளின் கீழ் தற்காலிகமாக குறித்த மருந்து பாவனை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மயக்க மருந்துகள், இந்திய கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த நாட்டின் மருந்து நிறுவனம் ஒன்றினால் அது அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான முன் பரிசோதனைக்கு பின்னரே இந்த மயக்க மருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதா? என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோக பிரிவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here