நான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு செல்வதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறியதாவது;
“.. தற்போதைய ஜனாதிபதி ஐ.தே.கவின் தலைவர் அல்ல, பொஹொட்டுவவின் தலைவர். அவருடன் நான் இணையவுள்ளதாகவும் சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவி கிடைக்கப் போவதாகவும் வெளியான செய்திகளை நிராகரிக்கின்றேன். ஐக்கிய மக்கள் சக்தியின் 40 உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைவார்கள் என்பதும் பொய்யானது.
சஜித் பிரேமதாசவின் தலைமையில் அரசாங்கத்தை அமைப்போம் என்றும் ராஜபக்சவின் தலைமையில் ஆட்சியில் சேர மாட்டோம் என்றும் பொறுப்புடன் ஊடகங்களுக்கு அறிவிக்கிறேன்.
ஒருவரின் அரசியல் போக்கை ஊகித்து வாழ்க்கை வரலாற்றை எழுதாதீர்கள். அது சமூகத்திற்கு தவறான கருத்தைத் தருகிறது..”