க.பொ.தராதர சாதாரண தரப் பரீட்சை இரு வாரங்களுக்கு தள்ளிப்போனது

857

பாடசாலைகளில் கூடுதலாக தங்கி படிக்கும் சுமார் 3 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு வகுப்பறை இடம் கிடைக்காமல் பாடசாலைகளில் தலைமையாசிரியர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

2022ம் ஆண்டுக்கான க.பொ.தராதர சாதாரண தரப் பரீட்சை இதுவரை நடத்த முடியாததால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சுமார் ஆறு லட்சம் மாணவர்கள் பதினொன்றாம் வகுப்புகளில் தங்க வேண்டியுள்ளது.

மேலும் உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக க.பொ.தராதர சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்கள் ஒத்திவைத்து அடுத்த மாதம் 29ஆம் திகதிக்கு பரீட்சையினை நடாத்த பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதற்கு முன்னர் க.பொ.தராதர சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 15ம் திகதி இடம்பெறவிருந்தது.

இந்த மாணவர்களுக்கு பரீட்சை நடத்தப்படும் வரை கல்வி விடுமுறை வழங்குவதற்கு பாடசாலை அதிபர்கள் முன்மொழிவதில்லை.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த கொழும்பில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர், இரு வருடங்களிலும் சுமார் ஆறு இலட்சம் மாணவர்களை பதினொன்றாம் தரத்தில் படிக்க வைப்பது முற்றிலும் சாத்தியமற்றது எனவும், அனைவருக்கும் கற்பிக்க ஆசிரியர்களை நியமிப்பது பாரிய பிரச்சினை எனவும் தெரிவித்தார்.

சில பாடசாலைகளில் இந்த மாணவர்கள் விளையாட்டு மைதானத்திலோ அல்லது மரத்தடியிலோ தங்க வேண்டியுள்ளனர்.

சில பாடசாலைகளில் ஒரு நாள் அல்லது மற்ற நாட்களில் கருத்தரங்குகள் நடத்தும் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர், பரீட்சை நடைபெறும் வரை இந்த அசௌகரியத்தை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here