follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடு13ஆவது திருத்த சட்டம் - பயங்கரவாத தடுப்புச் சட்டம் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கம்

13ஆவது திருத்த சட்டம் – பயங்கரவாத தடுப்புச் சட்டம் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கம்

Published on

நெருக்கடியான காலத்தில் இலங்கைக்கு கடனுதவி வழங்கியவர்களுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நன்றி தெரிவித்தார்

நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து பிரச்சினைக்கு இனக்குழுக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதோடு, ஸ்திரத்தன்மையை உருவாக்கி, பொருளாதாரத்தை பலப்படுத்துவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நிகழ்வில் உரையாற்றும் போதேஅவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க நோக்கங்களுக்காக 3 அத்தியாயங்களின் கீழ் அரசாங்கத்தின் தேசிய நல்லிணக்கம் தொடர்பாக அமைச்சரவை உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் அத்தியாயமாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி பாராளுமன்றத்தின் ஏனைய கட்சிகளின் ஆதரவினை பெற்று, அனைத்து இலங்கையர்களுக்கும் கிடைக்க வேண்டிய கௌரவம் தொடர்பான விரிவான இணக்கப்பாட்டினை எட்டுவதாகும்.

அடுத்த கட்டமாக, நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கைதிகளை விடுதலை செய்தல், அவர்களின் வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, சர்வதேச தரத்திற்கு அமைவாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசிப்பதாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புக்கூறல் செயற்பாடுகளுக்காக உண்மையை கண்டறிவதற்கான உள்ளக பொறிமுறை ஒன்றை நிறுவுவதே இதன் மூன்றாம் அத்தியாயமாகும். அத்துடன், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், தென் ஆபிரிக்காவின் அனுபவங்கள் குறித்து ஆராயவும் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது.” என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...